நுவரெலியா- ராகலையை சேர்ந்த மெய்யப்பன் சசிகுமார் 09 தங்க பதக்கங்களை இந்தியாவில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் வென்றுள்ளார்.
மும்பை நாசிக் மைதானத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் 04 தங்கப்பதக்கங்களையும் ,மதார்ஸ்டா உடுவிலி மகாத்மா மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 05 தங்கப்பதக்கங்களையும் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.
மேலும் இவர் பிரதிநிதித்துவ படுத்திய 800 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தை இலங்கை குழு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.