நானுஓயா நிருபர் தி.தர்வினேஷ்

அக்கரப்பத்தனை டொரிங்டன் கல்மதுரை தோட்டத்திருந்து தேயிலை மலைகளுக்கு உரம் ஏற்றிச் சென்ற ட்ராக்டர்  வண்டி கடந்த 05 ம் திகதி அன்று குடை சாய்ந்ததில் மூவர் படுங்காயங்களுடன் அக்கரப்பத்தனை பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நிலையில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய சங்க புள்ள தங்கையா என்ற இரண்டு பிள்ளைகளில் தந்தை கடந்த 11ஆம் திகதி காலை உயிரிழந்தார்.

இவ்வாறு இறந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இரண்டு நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்க்கு தோட்ட நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கோரி கல்மதுரை டொரிங்டன் அலுப்புவத்த மோர்சன் ஆகிய தோட்டங்களை சேர்ந்த 900 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த வருகின்றனர்.

விபத்தில் இறந்த நபரின் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காகவும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத பாண்டி ராமேஸ்வரன் இ.தொ.காவின் தேசிய அமைப்பார் ஏ.பி சக்திவேல் பிரதேசபை தவிசாளர் ராமன் கோபாலகிருஷ்ணன் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் எஸ் சச்சிதானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஜீவன் தொண்டமான் தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி நஷ்ட ஈடு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து தோட்ட நிர்வாகம் 30 இலட்சம் பணமாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக குத்தகதை அடிப்படையில் காணி மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான வீடு ஓன்றையும் சீரமைத்து தருவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்தவரின் மரண சடங்கு செலவு தோட்ட நிர்வாகமே பொறுபேற்றுக்கொள்வதாக தோட்ட நிர்வாகம் ஜீவன் தொண்டமான் அவர்களிடம் தெரிவித்தனர்.