HTML tutorial

இராகலையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட மகாகவி பாரதியின்
ஜனன தினம்!

இராகலை உயர் பாடசாலை பாரதி திருவுருவச்சிலை முன்றலில் அதிபரின் தலைமையில் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் அஞ்சலி நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன வெகு விமரிசையாக  (11/12/22) இடம்பெற்றன.

மேலும் இந்நன்னாளில் இராகலை மற்றும் அதனை சூழ வறுமையின் பிடியில் வாடும் மாணவர்களின் கல்விக்கு புத்தாண்டில் கை கொடுக்கும் முகமாக அனைவரும் ஒன்றிணைந்து கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தினையும்  ஆரம்பித்து வைத்தனர்.