ஓமானில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஆட்கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொள்வதற்காக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகப் பிரதிநிதிகள் ஓமானுக்குச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அங்குள்ள இலங்கையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இவர்கள் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டவிதிகளை மீறிய வகையில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பிய சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பில் விசேட கவனத்தை இவர்கள் செலுத்தியுள்ளனர்.