HTML tutorial

ஓமானுக்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷானுக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 29ஆம் திகதி அதிகாலை ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது செய்யப்பட்டார்.