HTML tutorial

அண்மையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்க நிலை காரணமாக இலங்கையில் அதிகமாக பகுதிகள் புயலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊவா மாகாணத்தில் பசறை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 763 வீடுகள் பகுதியளவிலும் 44 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்திருந்தன.

குறித்த வீடுகளை சீர்த்திருத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக அரசாங்கத்தினால் 10000 ரூபாய் காசோலை வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வு பசறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தலைமையில் 28 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட 185 குடும்பங்களுக்கு 10000 ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கிவைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வுக்கு ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பசறை பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வு இன்று சுமார் 1.00 மணியளவில் பசறை பிரதேச செயலக கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

ராமு தனராஜா