காலநிலைமாற்றத்தினால் சர்ம நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதுநிலவிவரும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக, சர்மம்  வறட்சி, ஒவ்வாமை, கீழ்வாதம், தோல்அழற்சி, முகப்பரு, சர்ம புற்றுநோய் உள்ளிட்ட குறுகிய கால, நீண்ட கால  நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதா
சர்ம மருத்துவக் கல்லூரியின் தலைவர் வைத்தியர் ஸ்ரீயானி தெரிவித்துள்ளார்.

இதேவேள,இவ்வாறான காலநிலையில் தமது கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பில் முறையான பயிற்சிகளைவழங்குவது அவசியமாகும். காலநிலை மாற்றங்களினால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களைவெற்றி கொள்வதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்குமாறு விவசாய  அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனைவழங்கியுள்ளார்.