HTML tutorial

2021 ஆம் ஆண்டுக்கான அதியுயர் ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி எழுதப்பட்ட எழுதப்பட்ட சிறந்த கட்டுரைக்கான விருது
கருப்பையா பிரசன்னகுமாருக்கு வழங்க்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கடந்த 13/12/2022 அன்று மவுண்ட் லேவனியா ஹோட்டலில் இடம்பெற்றது.

நிகழ்வை பத்திரிக்கை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திகை ஆசிரியர் சங்கம் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது.

மஸ்கெலியா புளும்பீல்ட் தோட்டத்தை சேர்ந்த தோட்டத்தொழிலாளிகளான கருப்பையா ,யோகலெட்சுமி ஆகியோரின் மகனான பிரசன்னா என்று அறியப்படுகின்ற பிரசன்னகுமார் தொடர்ச்சியாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி பல பிரச்சனைகளை வெளிகொண்டுவந்துள்ளார்.இவர் தற்போது தினக்குரல் பத்திரிகையில் சேவை புரிந்தும் வருகிறார்.