மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம் – கொழும்பு மாநகர் மருதானை – அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில்
அருவுருவாய் ரூபமாய் இருந்தியக்கி அண்டமெல்லாம் ஆட்டுவிக்கும் சிவனே
அருள் பொழிந்து வளமளித்து காத்து நலன் தருவாய்
இருள் போக்கி மனத்தில் ஒளியேற்ற வேண்டும்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட கைலாதநாத சுவாமியே
அருள்வாய்
உயிரினுள் உயிராக உறைகின்ற சிவனே
உண்மையெங்கும் உறுதிபெற காத்து நலன் தருவாய்
ஆசையறுத்து மனதில் ஒளியேற்ற வேண்டும்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட கைலாதநாத சுவாமியே
அருள்வாய்
மூத்தபிள்ளை விநாயகரின் கோயில் அருகமர்ந்த சிவனே
முத்தமிழுக் குரிமை தந்து காத்து நலன் தருவாய்
மூர்க்க குணம் களைந்து மனதில் ஒளியேற்ற வேண்டும்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட கைலாதநாத சுவாமியே
அருள்வாய்
ஐந்தெழுத்து மந்திரத்தில் உறைந்தருளும் சிவனே
ஐம்புலன்கள் சீர்செய்து காத்து நலன் தருவாய்
ஐயம் களைத்து மனதில் ஒளியேற்ற வேண்டும்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட கைலாதநாத சுவாமியே
அருள்வாய்
சக்தியம்மை உடனிருந்து உலகியக்கும் சிவனே
உடல், உள சுகங்கள் தந்து காத்து நலன் தருவாய்
உத்தம மனந்தந்து மனதில் ஒளியேற்ற வேண்டும்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட கைலாதநாத சுவாமியே
அருள்வாய்
மான் மழுவைக் கரமேந்தி காட்சி தரும் சிவனே
மனஅமைதி தந்து காத்து நலன் தருவாய்
மானம் குன்றா வாழ்வுதந்து மனதில் ஒளியேற்ற வேண்டும்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட கைலாதநாத சுவாமியே
அருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்துமாமன்றம்.