மத்திய மாகாணம் – நுவரெலியா மாவட்டம் நுவரெலியா சீதா எலிய அருள்மிகு சீதை அம்மன் திருக்கோயில்
வளங்கொண்ட மலையகத்தின் மத்தியிலே வந்தமர்ந்தாய்
வல்லமனம் கொண்டவளே மாசற்ற பெருந்தேவி
உள்ளமெல்லாம் நீ நிறைந்து உரிய வழி காட்டிடம்மா
சீதை அம்மன் கோயிலுறை எம்தாயே சீதையம்மா
அழகுமிகு சூழலிலே அருளிக்க வந்தமர்ந்தாய்
அச்சம் அகற்றியெம்மை அரவணைக்கும்
பெருந்தேவி உதிரத்தில் நீ நிறைந்து உரிய வழி காட்டிடம்மா
சீதை அம்மன் கோயிலுறை எம் தாயே சீதையம்மா.
மலை சூழ்ந்த திருநகரில் காட்சிதர வந்தமர்ந்தாய்
மாதர் குல நாயகியே மாசற்ற பெருந்தேவி
உணர்வு தனில் நிறைந்து உரிய வழி காட்டிடம்மா
சீதை அம்மன் கோயிலுறை எம் தாயே சீதையம்மா.
இலங்கை திருநாட்டில் அறம் காக்க வந்தமர்ந்தாய்
இணையில்லா தாயவளே எங்கள் குல பெருந்தேவி
உயிரினிலே நீ நிறைந்து உரிய வழி காட்டிடம்மா
சீதை அம்மன் கோயிலுறை எம் தாயே சீதையம்மா.
இராமபிரான் அருளினையும் உடன் கொண்டு வந்தமர்ந்தாய்
கற்பின் இலக்கணமாய் வாழ்ந்திட்ட பெருந்தேவி
காலமெல்லாம் நீ நிறைந்து உரிய வழி காட்டிடம்மா
சீதை அம்மன் கோயிலுறை எம் தாயே சீதையம்மா.
துன்பங்கள் துடைத்தெறியவென்று தூயவளே வந்தமர்ந்தாய்
துணையிருந்து காப்பளிக்கும் எங்கள் பெருந்தேவி
வாழ்க்கையிலே நீ நிறைந்து உரிய வழி காட்டிடம்மா
சீதை அம்மன் கோயிலுறை எம் தாயே சீதையம்மா.
ஆக்கம் – த.மனோகரன்
துணை தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.