HTML tutorial

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில்  நேற்று (17) காலை ரெயிலில் மோதுண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட வந்த பன்னிரெண்டு பேர் கொண்ட குழுவில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த திலினி லக்ஷானி என்ற யுவதியும் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ரொஷான் ரந்திக என்ற இளைஞனும் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை ரெயில் நிலையத்தை அண்மித்த கடற்கரைக்கு சென்ற அவர்கள் புகையிரத பாதையை கடக்க முயன்ற போது மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரெயிலில் மோதி விபத்துக்குள்ளானார்கள்.