24 வது கொடகே சாகித்திய விழா தேசிய நூலக சபை கேட்போர் கூடத்தில் (15.) சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பொழுது தமிழ் நூல்களுக்கான விருதுகளை இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஓமர் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை வகித்த தேசப்பந்து சிரிசுமன கொடகே, திருமதி நந்தா கொடகே ஆகியோருடன் இணைந்து வழங்கி வைத்தார்.
24 வது கொடகே சாகித்திய விழா சிறந்த நாவலுக்கு ஆ.மு..சி வேலழகனின் அன்புடையர் பிறர்க்கு என்ற நாவலுக்கும், சிறந்த சிறுகதைத் தொகுதிக்கு பாலரஞ்சனி ஜெயபாலின் நெத்திக்காசு என்ற சிறுகதைத் தொகுதிக்கும், சிறந்த கவிதைத் தொகுதிக்கு ஏ.கே.முஜாரத்தின் கடுவன் பூனை என்ற கவிதைத்தொகுதிக்கும், முதல் நூலுக்கான விருது ஜன்ஸி கபூரின் பிறப்பிட நிழலிலே எனும் நூலுக்கும், இரா.சடகோபனின் மொழிபெயர்ப்பு நூலான தேத்தண்ணிக்கும், ஆக்க இலக்கிய பிரதிப் போட்டியில் தெரிவான சிறந்த நாவலான ஏ.எஸ். உபைத்துல்லாவின் வேராகிப் போன மனிதர்கள் எனும் நாவலுக்கும், சிறந்த சிறுகதைத் தொகுதியான எஸ்.பாயிஸா அலியின் ஒளிப் பொட்டுகளாய் உருமாறி எனும் சிறுகதைத் தொகுதிக்கும், சிறந்த கவிதைத் தொகுதியான மலைகளின் பாடல் எனும் கவிதைத் தொகுதிக்கும் விருதுகளை வழங்கி வைத்தார்கள்.