HTML tutorial

வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம் – கிளிநொச்சி – இரணைமடு – அருள்மிகு கனகாம்பிகை அம்மன் திருக்கோயில்.

காலமெல்லாம் உன்னடியைப் பற்றிநிற்கும் அடியவர்கள்
வாழ்வில் பெரும்பேறு பெற்றிடவே அருள்தருவாய்
பாழ்படா நிலைதந்து வாழ்வில் எழுச்சிபெற
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்

தேடிவந்து உன்னடியைத் தொழுது நிற்கும் அடியவர்கள்
வாழ்வில் வளம் பெற்று உயர்ந்திடவே அருள் தருவாய்
வீழும் நிலை அண்டாமல் வாழ்வில் எழுச்சிபெற
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்

நம்பிவந்து உன்னடியை நாளும் வணங்குகின்ற அடியவர்கள்
வாழ்வில் ஒளியேற்றி எழுச்சிபெற அருளிடுவாய்
நாளும் நன்மைகளை நாம் பெற்று வளம்பெறவே
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்

நன்மைகள் பெற்றுய்ய நாளும் உன்னை நாடுகின்ற அடியவர்கள்
வாழ்வில் துணையிருந்து வழிகாட்டி அருளிடுவாய்
மனவலிமை உடல் வலிமை நாம்பெற்று வலிமைபெற
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்

துன்பமின்றி வாழ்வதற்கு உன் கருணை நாடி நிற்கும் அடியவர்கள்
வாழ்வில் இன்பமே நிறைந்துய்ய துணையிருந்து அருளிடுவாய்
பஞ்சமும் பட்டினியும் அற்றநிலை நிலைத்திடவே
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்

நிம்மதியை தேடி, நாடி உன்னடியை காலமெல்லாம் காத்திருக்கும் அடியவர்கள்
வாழ்வில் குறைகளைந்து நிறைதந்து அருளிடுவாய்
அமைதி கொண்ட நல்வாழ்வு நாளும் நிலைத்திடவே
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.