லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் முகமான வாக்கெடுப்பில் சிறி லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவருமாக இருவர் போட்டியிட்டனர்.
இதில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த L..P.N.U.A.அநுரவிக்ரமதுங்க மேலதிக மூன்று வாக்குகளால் தவிசாளராக இன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் சிறி லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த 3 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
இவருக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 10.
சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் பிரதிநிதித்துவப் படுத்தும் R.W.P.L.U. எட்வின் இவருக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 7.
சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவரும் சிறி லங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் இருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவருமாக மொத்தமாக 7 வாக்குகள் கிடைக்கப்பெற்றது.
நடுநிலை
J.V.P. ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின் ஒருவரும் சிறி லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் மேற்குறிப்பிட்ட மூவரும் நடுநிலை வகித்தனர்.
2023 ற்கான வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பின் போது லுணுகலை பிரதேச சபை 2 தடவை தோல்வியுற்றிருந்த நிலையிலேயே இன்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே புதிய தவிசாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராமு தனராஜா