HTML tutorial

எதிர்வரும் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் தினம் வார விடுமுறை தினமான 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதனால் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.