HTML tutorial

பண்டிகை காலத்தை முன்னிட்டு டிசம்பர் 24, 25, 26, 31, ஜனவரி 01 திகதி ஆகிய நாட்களில் மின் துண்டிப்பு இடம் பெறாது என்று மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனவரி மாதத்தில் மின் துண்டிப்பு 2.20 நிமிடங்கள் மாத்திரம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டண அதிகரிப்பு  இடம்பெறும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மின் கட்டணத்தில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்வதற்கு சட்டமா அதிபரின் சிபாரிசுகள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

இந்த விடயத்தை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதாகவும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.