மொனராகலை மாவட்ட, படலகும்புற கோட்டத்துக்கு உட்பட்ட மொ/திருவள்ளூவர் தமிழ் மகா வித்தியாலயத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நூல் வெளியீட்டு நிகழ்வும் விருது வழங்கும் விழாவும் கடந்த வாரம் பாடசாலையின் அதிபர் திருமதி ப.ரேணுகாதேவி தலைமையில் நடைபெற்றது.

 

அன்று 2022 அகில இலங்கை தமிழ் மொழித்தின , சிறுகதை போட்டி நிகழ்ச்சியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவி உபாசினி இன்,கதைகளை “செங்காந்தள் காற்றே” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. மேலும் அந்த வருடத்தில் பாடசாலைக்கு வெற்றிகளை பெற்று தந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பாரட்டப்பட்டனர்.

நிகழ்வில் மாகாண பிரதி கல்வி பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர், கோட்டக் கல்வி பணிப்பாளர், Lanka help foundation முகாமையாளர், அயல் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றார்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வானது இந்த பாடசாலைக்கு பெரும் வரவேற்பைப் வலயத்தில் பெற்றுள்ளதுடன், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், ஆசிரியர்களின் முயற்சிக்கு உந்துதலாக இருப்பதாகவும், பாடசாலையின் எதிர்கால வெற்றிக்கு சிறந்த தலைமைத்துவம் கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் அங்கு உரையாற்றிய பலரும் பாராட்டி பேசினர்.