HTML tutorial

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸில் பணம் மற்றும் கைபேசி  திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவதாவது இன்று (23/12) கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸில் எட்டியாந்தோட்டயில் பாதிக்கப்பட்டவர் தனது பயணத்தை அரச பேருந்தில் மதியம் 12.40 அளவில் பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 2.30 மணிக்கு ஹட்டனில் இறங்கியுள்ளார்.

பஸ்ஸில் அதிக பயணிகள் இருந்ததன் காரணமாக ஓட்டுனர் பக்கத்தில் வைக்கப்பட்ட பையில் இருந்த 20.000 ரூபா பணம் மற்றும் ஸ்மாற் கைபேசி உட்பட அடையாள அட்டை என்பன காணாமல் போய் உள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் குறித்த பையிக்கு அருகாமையில் சந்தகேதுக்கு இடமான முறையில் நடந்து கொண்ட ஒருவர் ஹட்டன் வட்டவளை பிரதேச பகுதியில் இறங்கியதாகவும் தெரிவித்தார் ,எனவே தனது தேசிய அடையாள அட்டை மற்றும் இதர பொருட்களை கண்டெடுத்தால் அல்லது தொலைபேசி சரிபார்க்கும் அல்லது சந்தேகத்துக்கு இடமான முறையில் விற்பனை செய்தால் தங்களுக்கு தகவல் சொல்லுமாறு பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.பாதிக்கபட்டவர் செல்வராணி தொலைபேசி 0718727878