வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – பருத்தித்துறை – அருள்மிகு பசுபதீஸ்வரர் சிவன் திருக்கோயில்
பக்தியுடன் உன்பாதம் பற்றுகின்றோம் சிவனே
பார்வையினை எம்மீது வைத்திடுவாய் ஐயா
பாவங்கள் போக்கி என்றும் நிம்மதியைத் தந்திடுவாய்
பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே
நம்பி உன்பாதம் பற்றுகென்றோம் சிவனே
நித்தமும் உடனிருந்து காத்தருள்வாய் ஐயா
துன்பங்கள் போக்கி என்றும் துணையிருப்பாய்
பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே
ஆறுதலை வேண்டி உன்பாதம் பற்றுகின்றோம் சிவனே
அச்சம் தவிர்த் தெம்மை ஆட்கொள்வாய் ஐயா
நம்பிக்கை தந்து என்றும் நலமளிப்பாய்
பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே
துணை நாடி உன்பாதம் பற்றுகின்றோம் சிவனே
துணையாக விருந்தெம்மைக் காத்தருள்வாய் ஐயா
துணிவு தந்து என்றும் வலுதருவாய்
பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே
ஆற்றலை வேண்டி உன்பாதம் பற்றுகின்றோம் சிவனே
அந்தரிக்கும் நிலை அகற்றி நிம்மதியை அருள்வாய் ஐயா
அன்பு மனம் தந்து என்றும் அரவணைப்பாய்
பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே
வாழ்வில் நலம் வேண்டி உன்பாதம் பற்றுகின்றோம் சிவனே
மாசற்ற மனவுறுதி வழங்கி வாழவைப்பாய் ஐயா
வெற்றிகள் தந்து என்றும் உயரச் செய்வாய்
பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.