HTML tutorial

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கோட்டை வரையான அஞ்சல் தொடரூந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து இரவு அஞ்சல் தொடரூந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, கண்டியில் தொடருந்து நிலையம் இன்று காலை நீரில் மூழ்கியிருந்ததுடன், தற்போது நீர் வழிந்தோடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிலிமத்தாலாவை மற்றும் பேராதனை தொடருந்து நிலையங்களுக்கு இடையே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் கெலிஓயா தொடருந்து நிலையம் நீரில் மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கொழும்பில் கண்டி வரையான தொடருந்து சேவை பிலிமத்தலாவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.