அநுராதபுரத்தில்  (27/12/22) நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில்   தனி வாத்திய இசை போட்டியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும் தனி இசை போட்டி நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தினையும் பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட கலபிட்டகந்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் தமதாக்கிக்கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் நெறியாள்கை செய்து வழிப்படுத்திய ஆசிரியை திருமதி. சரிதா சிவக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பண்டாரவளை வலய கல்வி பணிப்பாளர்கள் , பாடசாலை அதிபர், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

செய்தி – நடராஜா மலர்வேந்தன்