HTML tutorial

இம்மாத இறுதியில் இருந்து 55 ரூபா விலையில் முட்டையை நுகர்வோருக்கு வழங்க கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உடன்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்குப்பின்னர் இத்தொழில் துறையைச்சேர்ந்தோர் கருத்து தெரிவிக்கையில் ,விற்பனையாளர்களுக்கு ரூபா 49/= க்கு முட்டை வழங்குவதாக குறிப்பிட்டனர். இடைத்தரகர்கள் அவற்றை களஞ்சியப்படுத்தி செயற்கையாக விலை அதிகரிப்பை ஏற்படுத்துவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

55 ரூபாவுக்கு முட்டையை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில் இம்மாத இறுதியில் இருந்து நாளாந்தம் 20 லொறிகளில் முட்டைகளை  கொழும்புக்கு அனுப்பிவைப்பதாக கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொழும்புக்கு கொண்டுவரப்படும் முட்டைகளை வாகனங்கள் மூலம் பொது மக்கள் கூடுதலாக வாழும் பகுதிகளில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக நாட்டில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் சதோச விற்பனை நிறுவனங்களுக்கும் இவை விநியோகிக்கப்பதற்கு வசதிகள் செய்துக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் அமைச்சர் மஹிந்த அமரவீர உடன்பாடு தெரிவித்துள்ளார்.