HTML tutorial

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு குறைப் புள்ளி வழங்கும் முறை அடுத்த வருடம் (2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கமைய 24 சாரதிகள் பெறுமதியான 24 புள்ளிகளை பெற்றால் அவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இன்று (30) தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த சாரதி ஒரு வருட காலத்திற்கு அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும், ஒரு வருடத்தின் பின்னர் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டுமெனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.