வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – காங்கேசன் துறை – குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்
தாயாக கருணைசெய்து காத்தருளும் அன்னை
தயவுடனே இருந்தெமக்கு வாழ வழியமைத்துத் தருவாள்
தீமைகள் நெருங்காது காத்து அருள் செய்வாள்
குரும்பசிட்டி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரி
அரவணைத்து அருளளித்து காத்தருளும் அன்னை
அச்சமின்றி நிம்மதியாய் வாழ வழியமைத்துத் தருவாள்
அதர்மநிலை அகற்றி காத்து அருள் செய்வாள்
குரும்பசிட்டி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரி
நோய் நொடிகள் அண்டாது காத்தருளும் அன்னை
நேர்மையாய் வாழ வழியமைத்துத் தருவாள்
நெருங்கி வரும் பகைகொடுமை போக்கி காத்து அருள் செய்வாள்
குரும்பசிட்டி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரி
வாழ நல்ல வழிகாட்டி காத்தருளும் அன்னை
வற்றா கருணை தந்து வாழ வழியமைத்துத் தருவாள்
வேதனைகள் நெருங்காது காத்து அருள் செய்வாள்
குரும்பசிட்டி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரி
எம் நிலைமை நன்குணர்ந்து காத்தருளும் அன்னை
என்றும் உடனிருந்து வாழவழி யமைத்துத் தருவாள்
எதிர்த்துவரும் கொடுமைகளைத் துரத்தியெம்மைக் காத்து அருள் செய்வாள்
குரும்பசிட்டி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரி
நம்பி வரும் பக்தர்களின் நலன் காத்தருளும் அன்னை
நம்மவர்கள் நலன் பேணி வாழவழியமைத்துத் தருவாள்
நீதியை உறுதி செய்து காத்து அருள் செய்வாள்
குரும்பசிட்டி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.