HTML tutorial

மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன்படி, மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் மேலும் கலந்துரையாடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்தவிடயங்களை குறிப்பிட்டார்.