வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், கீரிமலை அருள்மிகு நகுலேஸ்வரம் சிவன் திருக்கோயில்
தில்லையிலே நின்றாடும் திருவருளே சிவனே
எல்லையில்லா கருணையினைத் தந்தருள்வாய் ஐயா
நல்லருளைத் தந்தெம்மைக் காத்தருள வருவாய்
நகுலேசுவரப் பதியமர்ந்த எங்கள் பெருமானே
கீரிமலை கோயில் கொண்ட திருவருளே சிவனே
பார் ஒளிர கருணையினைத் தந்தருள்வாய் ஐயா
வல்லமை தந்தெம்மைக் காத்தருள வருவாய்
நகுலேசுவரப் பதியமர்ந்த எங்கள் பெருமானே
வடஇலங்கைக் கரையினிலே வந்துறையும் திருவருளே சிவனே
வருந்துன்பம் களைந்து விடும் கருணையினை தந்தருள்வாய் ஐயா
அரவணைப்பைத் தந்தெம்மைக் காத்தருள வருவாய்
நகுலேசுவரப் பதியமர்ந்த எங்கள் பெருமானே
அறிவு தந்து ஆற்றல் தரும் திருவருளே சிவனே
ஆறுதலை உறுதி செய்து கருணையினை தந்தருள்வாய் ஐயா
நிம்மதியைத் தந்தெம்மைக் காத்தருள வருவாய்
நகுலேசுவரப் பதியமர்ந்த எங்கள் பெருமானே
மனவுறுதி தந்தெம்மை வாழச் செய்யும் திருவருளே சிவனே
நோய்நொடிகள் போக்கியென்றும் கருணையை தந்தருள்வாய் ஐயா
நேர்மைமிகு வாழ்வு தந்து காத்தருள வருவாய்
நகுலேசுவரப் பதியமர்ந்த எங்கள் பெருமானே
தமிழ் முழங்கும் திருமண்ணில் காட்சிதரும் திருவருளே சிவனே
ஆதரவு அளித்தென்றும்
கருணையைத் தந்தருள்வாய் ஐயா
அஞ்சாத மனம் தந்து காத்தருள வருவாய்
நகுலேசுவரப் பதியமர்ந்த எங்கள் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.