HTML tutorial

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில்

திருநெல்வேலி கோயில் கொண்டு திருவருளைத் தருபவளே
திக்கெட்டும் நலன் பெறவே கருணையை நீ செய்யுமம்மா
தெளிவான அறிவுதந்து எமையென்றும் வாழவைப்பாய்
அருள் பொழியும் எங்கள் தாயே முத்துமாரியம்மா

வளங் கொண்ட தமிழ் மண்ணில் வந்தமர்ந்து இருப்பவளே
வளம் பெற்று நலன் பெறவே கருணையை நீ செய்யுமம்மா
மென்மையுள்ளம் கொண்டவராய் எமையென்றும் வாழவைப்பாய்
அருள் பொழியும் எங்கள் தாயே முத்துமாரியம்மா

வடஇலங்கை கோயில் கொண்டு நலன்கள் அள்ளித் தருபவளே
நேர்வழியைக் காட்டியென்றும் நலன் பெறவே கருணையை நீ செய்யுமம்மா
நேர்மையாய் வாழவழிசெய்து எமையென்றும் வாழவைப்பாய்
அருள் பொழியும் எங்கள் தாயே முத்துமாரியம்மா

அன்பு கொண்டு ஆற்றல் தந்து நல்லருளைத் தருபவளே
அறநெறியில் வாழும்வழி தந்தென்றும் நலன் பெறவே கருணையை நீ செய்யுமம்மா
திறமையுடன் நிலை பெற்று எமையென்றும் வாழவைப்பாய்
அருள் பொழியும் எங்கள் தாயே முத்துமாரியம்மா

உடல்வலுவும், உளவலுவும் உறுதி செய்து தருபவளே
உற்சாகம் நிலைத்திடவே கருணையை நீ செய்யுமம்மா
உறுதி கொண்ட மனத்தினராய் எமையென்றும் வாழவைப்பாய்
அருள் பொழியும் எங்கள் தாயே முத்துமாரியம்மா

நோய் நொடிகள் நெருங்காது காத்து அருள் தருபவளே
தலைநிமிர்ந்து வாழ்ந்திடவே கருணையை நீ செய்யுமம்மா
ஒழுக்கம் கொண்ட பெருமையுடன் எமையென்றும் வாழவைப்பாய்
அருள் பொழியும் எங்கள் தாயே முத்துமாரியம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.