கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம்- கல்முனை, கல்முனை வடக்கு, ஆதார வைத்தியசாலை அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயில்
சித்திகள் வழங்குமெங்கள் சித்தி விநாயகரே
சத்தியத் திருவுருவே சங்கடம் தீர்ப்பவரே
நத்தி அடி பணிவோர் நலன்களின் காவலனே
கல்முனை வடக்கிருந்து காத்து அருளிடைய்யா
ஆதார வைத்தியசாலை அருகிலே கோயில் கொண்ட சித்தி விநாயகரே
ஆதரவு தந்தெமது குறைகளைத் தீர்ப்பவரே
நம்பி அடி பணிவோர் நலன்களின் காவலனே
கல்முனை வடக்கிருந்து காத்து அருளிடைய்யா
கிழக்கிலங்கை கரையிருந்து காட்சிதரும் சித்திவிநாயகரே
கிலேசமில்லா வாழ்வு தந்து அச்சங்கள் தீர்ப்பவரே
காலமெல்லாம் அடி பணிவோர் நலன்களின் காவலனே
கல்முனை வடக்கிருந்து காத்து அருளிடைய்யா
துன்பங்கள் களைந்து துயர்போக்கும் சித்திவிநாயகரே
துணையிருந்து துணிவுதந்து குறைகளைத் தீர்ப்பவரே
போற்றி அடி பணிவோர் நலன்களின் காவலனே
கல்முனை வடக்கிருந்து காத்து அருளிடைய்யா
இன்னல் தடுத் தென்றும் ஆதரிக்கும் சித்தி விநாயகரே
அல்லல் அணுகாமல் கவலைகள் தீர்ப்பவரே
நித்தம் அடி பணிவோர் நலன்களின் காவலனே
கல்முனை வடக்கிருந்து காத்து அருளிடைய்யா
செந்தமிழர் வாழ்விடத்தில் அமர்ந்தருளும் சித்திவிநாயகரே
சீர்கேடு அண்டாமல் பாவங்கள் தீர்ப்பவரே
பக்தியுடன் அடி பணிவோர் நலன்களின் காவலனே
கல்முனை வடக்கிருந்து காத்து அருளிடைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலை வர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.