HTML tutorial

வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம், நாத்தாண்டியா – வலஹாப்பிட்டி வீதி, அருள்மிகு ஐயனார் திருக்கோயில்

காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் ஐயனாரே
காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வேண்டுகின்றோம்
எப்பொழுதும் துணையிருந்து நன்மைகள் தருகின்ற
நாத்தாண்டியாவில் கோயில் கொண்ட ஐயனாரே அருளிடைய்யா

துன்பங்கள், துயரங்கள் அண்டாது காத்தருளும் ஐயனாரே
துணையிருந்து எங்கள் நிலை காத்தருள வேண்டுகின்றோம்
என்றும் உடனிருந்து எமைக் காத்து அருளுகின்ற
நாத்தாண்டியாவில் கோயில் கொண்ட ஐயனாரே அருளிடைய்யா

கொடுஞ்செயல்கள் நெருங்காது காத்தருளும் ஐயனாரே
நாளும் பொழுதும் நன்மை செய்து காத்தருள வேண்டுகின்றோம்
காப்பளித்து அருகிருந்து நன்மைகள் அளிக்கின்ற
நாத்தாண்டியாவில் கோயில் கொண்ட ஐயனாரே அருளிடைய்யா

விழித்திருந்து என்றுமெம்மைக் காத்தருளும் ஐயனாரே
விரைந்து வந்து நன்மை தந்து காத்தருள வேண்டுகின்றோம்
விருப்புகளை நிறைவேற்றி நன்மைகளை தருகின்ற
நாத்தாண்டியாவில் கோயில் கொண்ட ஐயனாரே அருளிடைய்யா

நல்லறிவு தந்தெம்மை என்றும் காத்தருளும் ஐயனாரே
நிலையான நன்மை செய்து காத்தருள வேண்டுகின்றோம்
நிம்மதியைத் தந்தெமக்கு வளங்களை அருளுகின்ற
நாத்தாண்டியாவில் கோயில் கொண்ட ஐயனாரே அருளிடைய்யா

வெற்றிகள் தந்தெம்மை என்றும் காத்தருளும் ஐயனாரே
வற்றாத நன்மை செய்து காத்தருள வேண்டுகின்றோம்
வாழ்நாளில் அகலாத நன்மைகளைத் தந்தருளுகின்ற
நாத்தாண்டியாவில் கோயில் கொண்ட ஐயனாரே அருளிடைய்யா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.