பள்ளாக்கட்டுவ போலிஸார்சாறினால் நேற்று இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 80 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள். தம் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 43 வயதுடைய கொடக்கவலை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் பள்ளாக்கட்டுவ பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபர் கோடக்காவளை பகுதியில் இருந்து பள்ளாக்கட்டுவ பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க வந்திருந்த நபரிடமே இவ்வாறு ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பள்ளாக்கட்டுவ போலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை பள்ளக்கட்டுவ போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

ராமு தனராஜா