HTML tutorial

ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு நேற்று உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன தெரிவித்துள்ளார்.

திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணத்தை வைப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு மாதாந்தம் 2600 கோடி ரூபாய் செலவாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.