HTML tutorial

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- காரைநகர் அருள்மிகு ஈழத்துச் சிதம்பரம் சிவன் திருக்கோயில்

நம்பியுன்னைச் சரணடையுமெங்கள் நலன் காக்கும் பெருமானே
நாளும் பொழுதும் அருகிருந்து கருணை செய்ய வேண்டுமைய்யா
நித்தம் உனைத் தொழும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா

சௌந்தராம்பிகை அன்னையுடன் உறையும் எங்கள் பெருமானே
சத்தியத்தை நிலைநிறுத்தக் கருணை செய்ய வேண்டுமைய்யா
சித்தத்தில் உனையிருத்தித் தொழும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா

காரைநகர் நற்பதியில் கோயில் கொண்ட பெருமானே
காலமெல்லாம் உடனிருந்து கருணை செய்ய வேண்டுமைய்யா
பற்றி உந்தன் தாள் பணியும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா

ஆண்டிலிரு திருவிழாக்கள் காணுகின்ற பெருமானே
ஆதரவு தந்தெமக்கு உடனிருந்து கருணை செய்ய வேண்டுமைய்யா
ஆறுதலை நாடி உன்னடி தொழும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா

கங்கையம்மை முடிகொண்டு காத்தருளும் பெருமானே
கவலையில்லா நிலைதந்து உடனிருந்து கருணை செய்ய வேண்டுமைய்யா
நிம்மதியை நாடி உந்தன் அடி பற்றிநிற்கும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா

ஐயனார் திருக்கோயில் அருகு கொண்ட பெருமானே
அச்சம் இல்லா நிம்மதிக்குக் கருணை செய்ய வேண்டுமைய்யா
அரவணைப்பை நாடி அடிபணியும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.