மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம் – கொழும்பு மாநகரம் கொச்சிக்கடை – அருள்மிகு பொன்னம்பல வாணஸ்வரம் திருக்கோயில்
கொழும்பு மாநகரினிலே கோயில் கொண்ட பெருமானே
கொள்கை பிறழா நிலை நின்று வாழவைக்க வேண்டுமைய்யா
நேர்மை மிகக் கொண்ட நல்லாட்சி நாளும் நிலைபெறவே
வழியமைப்பாய் எங்கள் பொன்னம்பல வாணேஸ்வரத்திலுறை பெருமானே
பஞ்ச பூதங்களையும் ஆளுகின்ற பெருமானே
பக்குவம் பிறழா நிலை நின்று வாழவைக்க வேண்டுமைய்யா
புனிதமிகு நல்லாட்சி நாளும் நிலைபெறவே
வழியமைப்பாய் எங்கள் பொன்னம்பல வாணேஸ்வரத்திலுறை பெருமானே
அருவுருவாய் ரூபமாய் அதற்கப்புறதிலுமாகி நின்று ஆளுகின்ற பெருமானே
அமைதி நிலை பிறழா நிலை நின்று வாழவைக்க வேண்டுமைய்யா
அச்சமில்லா நல்லாட்சி நாளும் நிலைபெறவே
வழியமைப்பாய் எங்கள் பொன்னம்பல வாணேஸ்வரத்திலுறை பெருமானே
கேட்டவரம் தந்தெம்மை வாழவைக்கும் பெருமானே
ஒழுக்க நிலை பிறழா நிலை நின்று வாழவைக்க வேண்டுமைய்யா
தவறில்லா நல்லாட்சி நாளும் நிலைபெறவே
வழியமைப்பாய் எங்கள் பொன்னம்பல வாணேஸ்வரத்திலுறை பெருமானே
அன்புருவாய் அருளுருவாய் உலகாளும் பெருமானே
ஆதரவு நிலை பிறழா நிலைநின்று வாழவைக்க வேண்டுமைய்யா
அறம் தவறா நல்லாட்சி நாளும் நிலைபெறவே
வழியமைப்பாய் எங்கள் பொன்னம்பல வாணேஸ்வரத்திலுறை பெருமானே
தமிழ் மொழியைத் தரணிக்குத் தந்திட்ட பெருமானே
தளும்பாத நிலை பிறழா நிலை நின்று வாழவைக்க வேண்டுமைய்யா
பண்பு தவறா நல்லாட்சி நாளும் நிலைபெறவே
வழியமைப்பாய் எங்கள் பொன்னம்பல வாணேஸ்வரத்திலுறை பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.