பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மதியம் அரச வைத்திய அதிகாரிகளின் சங்க தலைவர் வைத்தியர் பாலித ராஜபக்ச தலைமையில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது

இவ் ஆர்ப்பாட்டத்தில் 80 அதிகமான வைத்தியர்கள் கலந்து கொண்டனர்

வைத்தியசாலைகளில் நிலவுகின்ற மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும்

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அநியாயமாக விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க வேண்டும் என இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு இவ் ஆர்ப்பாட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டிருந்தனர்

ராமு தனராஜா