2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 4.24 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாடசாலை சீருடைகள் நேற்று(13) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.