மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம், மாத்தளை சிந்தாக்கட்டி குமரமலை அருள்மிகு குமரப் பெருமான் திருக்கோயில்

குமரமலை மீதிருந்து குறை களையும் பெருமானே
குறைவில்லா நல்லருளைத் தயங்காது தந்திடைய்யா
உன்காப்பு எமக்கென்றும் துணையிருக்க வேண்டும்
சிந்தாக்கட்டியிலுறை குமரப் பெருமானே அருள்வாய்

சேவற் கொடி தாங்கி அறம் காக்கும் பெருமானே
சோர்வில்லா மனவுறுதி தயங்காது தந்திடைய்யா
உன்காப்பு எமக்கென்றும் துணையிருக்க வேண்டும்
சிந்தாக்கட்டியிலுறை குமரப் பெருமானே அருள்வாய்

அருள் தந்து வளமளித்து அரவணைக்கும் பெருமானே
அசையாத நிம்மதியைத் தயங்காது தந்திடைய்யா
உன்காப்பு எமக்கென்றும் துணையிருக்க வேண்டும்
சிந்தாக்கட்டியிலுறை குமரப் பெருமானே அருள்வாய்

மலைசூழ்ந்த திருவிடத்தில் அமர்ந்தருளும் பெருமானே
கௌரவமாய் வாழும் வழி தயங்காது தந்திடைய்யா
உன்காப்பு எமக்கென்றும் துணையிருக்க வேண்டும்
சிந்தாக்கட்டியிலுறை குமரப் பெருமானே அருள்வாய்

நம்பித் தொழும் அடியவர்கள் நலன் காக்கும் பெருமானே
உரிமை பெற்று நாம் வாழும் நிலை தயங்காது தந்திடைய்யா
உன்காப்பு எமக்கென்றும் துணையிருக்க வேண்டும்
சிந்தாக்கட்டியிலுறை குமரப் பெருமானே அருள்வாய்

அதர்மங்கள் அழித்தொழிக்க அவதரிக்கும் பெருமானே
வரும் துன்பம் தடுக்கும் நிலை தயங்காது தந்திடைய்யா
உன்காப்பு எமக்கென்றும் துணையிருக்க வேண்டும்
சிந்தாக்கட்டியிலுறை குமரப் பெருமானே அருள்வாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.