வடமாகாணம்- வவுனியா மாவட்டம்- வவுனியா புளியங்குளம் புதூர் அருள்மிகு நாகதம்பிரான் திருக்கோயில்

புனிதமிகு திருவிடத்தில் கோயில் கொண்ட தம்பிரானே
புதுமைகள் செய்தெமக்கு வாழ அருள் செய்திடுவாய்
புத்தெழுச்சி பெற்றுநாம் வீறுநடை போட்டிடவே
கருணை செய்து புதுப்பாதை வடிவமைப்பாய் நாகதம்பிரானே

வழித்துணையாயிருந் தெமக்கு வழிகாட்டும் தம்பிரானே
வல்லமை கொண்டவராய் வாழ அருள் செய்திடுவாய்
புத்தெழுச்சி பெற்றுநாம் வீறுநடை போட்டிடவே
கருணை செய்து புதுப்பாதை வடிவமைப்பாய் நாகதம்பிரானே

புளியங்குளம் புதூரில் இருந்தருளும் தம்பிரானே
ஆற்றலுடன் நாமென்றும் வாழ அருள் செய்திடுவாய்
புத்தெழுச்சி பெற்றுநாம் வீறுநடை போட்டிடவே
கருணை செய்து புதுப்பாதை வடிவமைப்பாய் நாகதம்பிரானே

வன்னித் தமிழ் மண்ணில் நிலைபெற்ற தம்பிரானே
வழிதவறா நிலை தந்து வாழ அருள் செய்திடுவாய்
புத்தெழுச்சி பெற்றுநாம் வீறுநடை போட்டிடவே
கருணை செய்து புதுப்பாதை வடிவமைப்பாய் நாகதம்பிரானே

கருணை கொண்டு மகிழ்வு தரும் தம்பிரானே
கவலை அண்டா நிலை தந்து வாழ அருள் செய்திடுவாய்
புத்தெழுச்சி பெற்றுநாம் வீறுநடை போட்டிடவே
கருணை செய்து புதுப்பாதை வடிவமைப்பாய் நாகதம்பிரானே

உடல் வலுவும், உளவலுவும் அளித்தருளும் தம்பிரானே
தழும்பாத நிம்மதி தந்துவாழ அருள் செய்திடுவாய்
புத்தெழுச்சி பெற்றுநாம் வீறுநடை போட்டிடவே
கருணை செய்து புதுப்பாதை வடிவமைப்பாய் நாகதம்பிரானே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.