வடமேற்கு மாகாணம் – புத்தளம் மாவட்டம் – புத்தளம் பாலாவி அருள்மிகு ஆலடி ஸ்ரீ வரசக்தி விநாயகர் திருக்கோயில்
பாலாவி நகரினிலே கோயில் கொண்ட விநாயகர்
பாழ்படா நிலை தந்து காத்தருள உடனிருப்பார்
பரிதவிக்கும் நிலையகற்றி என்றும் துணையிருப்பார்
ஐயனின் அடியினையே பற்றிப் பிடித்திடுவோம்
நம்பிக்கை உறுதி செய்து நலன் காக்கும் விநாயகர்
நிம்மதியைத் தந்தெம்மைக் காத்தருள உடனிருப்பார்
துன்ப நிலையகற்றி என்றும் துணையிருப்பார்
ஐயனின் அடியினையே பற்றிப் பிடித்திடுவோம்
ஆற்றல் தந்து ஆதரித்து அரவணைக்கும் விநாயகர்
அச்சமில்லா வாழ்வு தந்து காத்தருள உடனிருப்பார்
அஞ்சும் நிலையகற்றி என்றும் துணையிருப்பார்
ஐயனின் அடியினையே பற்றிப் பிடித்திடுவோம்
நெஞ்சில் நிறைந்துறைந்து நிலை காக்கும் விநாயகர்
நல்ல வள வாழ்வு தந்து காத்தருள உடனிருப்பார்
அவல நிலையகற்றி என்றும் துணையிருப்பார்
ஐயனின் அடியினையே பற்றிப் பிடித்திடுவோம்
நல்லவரம் தந்தெம்மை வழிநடத்தும் விநாயகர்
இன்னலில்லா வாழ்வுதந்து காத்தருள உடனிருப்பார்
தேக்க நிலையகற்றி என்றும் துணையிருப்பார்
ஐயனின் அடியினையே பற்றிப் பிடித்திடுவோம்
புத்தளத்தில் வீற்றிருந்து காப்பளிக்கும் விநாயகர்
புனிதமிகு வாழ்வு தந்து காத்தருள உடனிருப்பார்
பேதலிக்கும் நிலை யகற்றி என்றும் துணையிருப்பார்
ஐயனின் அடியினையே பற்றிப் பிடித்திடுவோம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.