நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதால குறுக்கு வீதியில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்றுமாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற பஸ் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பாதையில் பயணித்த வேன் மற்றும் முச்சக்கரவண்டி மீது மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்தால் வேனில் பயணித்த 07பேர் சம்பவ இடத்திலையே பலியானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் உடனடியாக பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்