கண்டி மாவட்டம் மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பாடசாலை ஊடகப் பிரிவின் அங்குரார்பண நிகழ்வு நேற்று (19) நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அ. ரஹீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று நண்பகல் 12 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. ஊடகத்துறையில் சாதிக்க கூடிய மாணவர்களை உருவாக்கும் நோக்கில் மடவளை மதீனா தேசிய பாடசாலையானது ஊடகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாடசாலை செய்திகளை ஏந்திய சஞ்சிகையொன்று வெளியிடப்பட்டதுடன் பாடசாலையின் ஊடகப்பிரிவின் மாணவர்களால் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்ச்சிகள் அதிதிகளின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் கலந்துகொண்ட அதிதிகளால் அவர்கள் பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
