வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – மருதனார்மடம் அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமான் திருக்கோயில்
இராமபிரான் தூதுவராய் இலங்கை வந்த ஆஞ்சநேயர்
இற்றைவரை உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்
மறம் அழித்து அறம் காக்க இலங்கை வந்த ஆஞ்சநேயர்
மதிதவறா நிலையிருக்க உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்
சீதையம்மை சிறைமீட்க இலங்கை வந்த ஆஞ்சநேயர்
மனவுறுதி தந்து உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்
கொடுங்கோன்மை ஆட்சியையே அழிக்க இலங்கை வந்த அஞ்சநேயர்
கொடியவர்கள் கொட்டத்தை அடக்கி உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்
தர்மத்தைத் தரணிக்குப் பறைசாற்ற இலங்கைவந்த ஆஞ்சநேயர்
தவறில்லாவழி காட்டி உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்
சிவனாரின் அவதாரமாய் இலங்கை வந்த ஆஞ்சநேயர்
சிந்தையிலே உறைந்து உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.