HTML tutorial

தலவாக்கலை மிடில்டன் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்திருத்தம் செய்துகொள்ளவென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் கட்டுமான பொருட்களை வழங்கி உதவி புரிந்துள்ளார்.

தீ விபத்தினால் சேதமடைந்த குடியிருப்புக்களை இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உள்ளிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச முக்கியஸ்தர்கள் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆருதல் கூறினர்.

மேலும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
தொழிலாளர்களின் லயன் குடியிருப்பில் ஏற்படும் தீ விபத்துக்களின் போது அவர்களுக்கு காப்புறுதி நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் வகையில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கூறினார்.