நுவரெலியா – நானுஓயா பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
62 வயதான சாரதியை நானுஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கவனயீனமாக பஸ்ஸை செலுத்தியமையே, இந்த விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கல்வி சுற்றுலாவிற்காக கொழும்பிலிருந்து நுவரெலியா சென்ற பஸ் ஒன்று, நானுஓயா – ரதல்ல பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வேன் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டு, பள்ளத்தை நோக்கி பயணித்திருந்தது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், 50 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.