HTML tutorial

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலை அருள்மிகு நகுலேசுவரம் திருக்கோயில்

வடஇலங்கைக் கரையினிலே வீற்றருளும் சிவனே
வளங் கொண்ட நல்வாழ்வை எமக்களிக்க வருவாய்
ஏற்றமிகு பெருவாழ்வை என்றும் நாம் அடைய
கருணை செய்வாய் நகுலேசுவரத்திலுறை எங்கள் பெருமானே

நகுலாம்பிகை அன்னையை உடன் கொண்ட சிவனே
நாட்டினிலே நம்முரிமை உறுதி செய்ய வருவாய்
நோய் நொடிகள் இல்லாத வாழ்வை என்றும் நாம் அடைய
கருணை செய்வாய் நகுலேசுவரத்திலுறை எங்கள் பெருமானே

அண்டமெல்லாம் ஆட்டி நிற்கும் அற்புதனே சிவனே
அகந்தையில்லா மனநிலையை எமக்களிக்க வருவாய்
அன்பு நிறை பெருவாழ்வை என்றும் நாம் அடைய
கருணை செய்வாய் நகுலேசுவரத்திலுறை எங்கள் பெருமானே

பஞ்சேஸ்வரத் தலமொன்றில் உறைகின்ற சிவனே
பஞ்சமில்லா நன்னிலையை எமக்களிக்க வருவாய்
நெஞ்சம் நிறை மன அமைதி என்றும் நாம் அடைய
கருணை செய்வாய் நகுலேசுவரத்திலுறை எங்கள் பெருமானே

பழம் பெருமை கொண்ட கோயிலுறை சிவனே
பரிதவிக்கும் நிலையகற்றி நலம் எமக்களிக்க வருவாய்
தளர்வில்லா பெருவாழ்வை என்றும் நாம் அடைய
கருணை செய்வாய் நகுலேசுவரத்திலுறை எங்கள் பெருமானே

வனப்புமிகு கோபுரத்தை கொண்டவரே சிவனே
வாழ்வினிலே நல்லமைதி எமக்களிக்க வருவாய்
கௌரவமாய் பெருமையை என்றும் நாம் அடைய
கருணை செய்வாய் நகுலேசுவரத்திலுறை எங்கள் பெருமானே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.