ராஜகிரிய – புத்கமுவ பிரதேசத்தில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (ஜன.21) பிற்பகல் நடாத்தப்பட்டாதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பழைய பொருட்களை சேகரிக்கும் வர்த்தக நிலையமொன்றின் மீது, மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த நபர், குறித்த வர்த்தக நிலையத்தில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.