HTML tutorial

நுவரெலியா மாவட்ட, கொட்டகலை பிரதேச சபைக்கு சுயேட்சை குழுவில் இளைஞர் தங்கராஜா ராஜ்குமார் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

தேர்தலுக்கான கட்டுப்பணத்தை சுயேட்சை குழுவின் தலைவர் நேசன் சங்கர் ராஜின் வழிகாட்டளோடு கடந்த 18ம் திகதி  செலுத்தியதோடு கைக்கோடாரி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

தான் இந்த தேர்தலில் போட்டியிடுவதுபற்றி ராஜ்குமார் தெரிவிக்கையில், தனது நோக்கம் பெருந்தோட்ட மக்களுக்கு தெளிவான அரசியல் சிந்தனைகளை உருவாக்குவதோடு கல்வி ,சமூக அபிவிருத்தியை நோக்காக கொண்டதாக இருக்கும் என குறிப்பிட்ட அவர், மக்களை ஏனைய அரசியல் வாதிகள் ஏமாற்றி வருகின்றனர். நான் ஒரு தோட்ட தொழிலாளியின்பிள்ளை என்பதால் பாமர மக்களின் பிரச்சனைகள் என்ன வென்பது எனக்கு நன்கு தெரியும். எனவே அதை நோக்கிய சமூக அரசியல் செயற் பாட்டை முன்னெடுத்து வருகின்றேன் என்று குறிப்பிட்டார்.

கட்டணம் செலுத்தப்பட்டது