HTML tutorial

 

கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தனது தந்தையுடன் சென்ற மாணவி மீது அசிட் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்த இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் அந்த மாணவியின் காதலன் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அசிட் வீசிய போது ஏற்பட்ட குழப்ப நிலையால், மாணவியின் தந்தை, மாணவி மற்றும் குறித்த இளைஞனும் காயமுற்று தற்போது கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொகமட் அலி