HTML tutorial

துபாயில் தலைமறைவாகி போதைப்பொருள் வலைப்பின்னலை முன்னெடுக்கும் கொலன்னாவையை சேர்ந்த தனுஷ்க என்பவரின் இந்நாட்டின் போதை பொருள் வலையமைப்பை செயல்படுத்தும் தெசான் தரேந்தர அல்லது யக்கட தரிந்து என்பவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை ,கொத்தட்டுவ  பிரதேசத்தில் நேற்று முன்தினம் (22) மேற்கொண்டு நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இவரிடமிருந்து 11 கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட 5 இலட்சத்துக்கு 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரூபாவும் கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைக்காக இவர் கொத்தட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஹொரண விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக இங்கிரிய குறுன மடக்கட என்ற காட்டு பகுதியில் முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

157 லீட்டர் போதைப்பொருள் மற்றும் அவற்றை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.