வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் – புத்தளம் மணற்குன்று – அருள்மிகு ஸ்ரீகருமாரியம்மன் (பொம்மக்க) திருக்கோயில்
காலமெல்லாம் உடனிருந்து காவல் செய்யும் தாயே
கவலைகள் அண்டாத மனத்தினையே தா
என்றும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும்
மணற்குன்றில் கோயில் கொண்ட எங்கள் தாயே கருமாரி அம்மா
புத்தளம் நன்னகரில் உறைந்து எம்மைக் காவல் செய்யும் தாயே
புத்துணர்வு கொண்ட மனத்தினையே தா
என்றும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும்
மணற்குன்றில் கோயில் கொண்ட எங்கள் தாயே கருமாரி அம்மா
சூலத்தைக் கையிலேந்தி காவல் செய்யும் தாயே
சூதுகள் அண்டாத மனத்தினையே தா
என்றும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும்
மணற்குன்றில் கோயில் கொண்ட எங்கள் தாயே கருமாரி அம்மா
வந்தவினை போக்கி வரும் வினைகள் தடுத்து காவல் செய்யும் தாயே
வெறுமை நிலையில்லாத மனத்தினையே தா
என்றும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும்
மணற்குன்றில் கோயில் கொண்ட எங்கள் தாயே கருமாரி அம்மா
ஆற்றல் தந்து ஆதரித்து காவல் செய்யும் தாயே
அச்ச நிலையில்லாத மனத்தினையே தா
என்றும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும்
மணற்குன்றில் கோயில் கொண்ட எங்கள் தாயே கருமாரி அம்மா
சுதந்திர தேவியாய் இருந்தெம்மைக் காவல் செய்யும் தாயே
வேதனைகள் நெருங்காத மனத்தினையே தா
என்றும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும்
மணற்குன்றில் கோயில் கொண்ட எங்கள் தாயே கருமாரி அம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.