கம்பளை வங்கி கொள்ளை l வேனின் சாரதி கட்டப்பட்ட நிலையில் வேனுடன் மீட்பு.

கம்பளை – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியிலுள்ள ATM இயந்திரமொன்று அடையாளம் தெரியாத நபர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேனொன்றில் வருகைத் தந்த முகமூடி அணிந்த 4 பேர், ATM இயந்திரத்திலிருந்த காவலாளியை கட்டி வைத்துவிட்டு, பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேன், பேராதனை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வேனின் சாரதி வேனுக்குள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.